கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

ஆன்லைனில் குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

ஆன்லைன் மூலம் குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம் செய்வது பற்றி..

News image

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 11:00 am IST

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் வீடு மாறிச் செல்லும் போது, குடும்ப அட்டைகளில் முகவரியை மாற்றும் அவசியம் நேரிடுகிறது.

அவ்வாறு குடும்ப அட்டையில் முகவரியை மாற்றம் செய்ய நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைன் மூலமாகவும் செய்து கொள்ளலாம்.

இதற்கு tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும்.

அதன் முகப்புப் பக்கத்தில் முகவரி மாற்றம் செய்ய என்ற வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு, குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணை உள்ளிடவும்.

அதன் கீழ் உள்ள கேப்ட்ச் குறியீட்டை சரியாக உள்ளிடவும்.

பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு வரும் 7 இலக்க ஓடிபியையும் பதிவு செய்யவும்.

அனைத்தையும் சரியாகக் கொடுத்துவிட்டு பதிவு செய் என்பதை கிளிக் செய்தால், குடும்ப அட்டை விவரங்கள் வரும்.

அந்த விவரங்களில் உள்ளவற்றை சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

பின்பு, புதிய முகவரி விவரங்களை வீட்டு எண், தெரு பெயர், பகுதியின் பெயர், கிராமம், மாவட்டம் அஞ்சல் குறியீட்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

அடுத்து புதிய முகவரியை தமிழில் சரியாக தட்டச்சு செய்யவும். அனைத்தையும் சரியாக உள்ளிட்டதும், இந்த முகவரியை உறுதி செய்ய 15 ஆவணங்களில் ஏதேனும் ஒன்ற இணைக்கலாம்.

1. ஆதார் அட்டை

2. வாக்காளர் அடையாள அட்டை

3. எரிவாயு நுகரவோர் அட்டை

4. வரி ரசீது

5. வாடகை ஒப்பந்தம்

6. குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு

7. வீடு ஆவணம்

8. மின்கட்டண ரசீது

9. தொலைபேசி ரசீது

10. வங்கிக் கணக்குப்புத்தகம்

11. பாஸ்போர்ட்.

12. ஓட்டுநர் உரிமம்

13. பான் அட்டை

14. வீட்டு வசதி வாரிய ஆவணங்கள்

15. அஞ்சலக அடையாள அட்டை இதில் புதிய முகவரி சரியான முறையில் இருக்கும் ஆவணத்தை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் 1.0 எம்பி அளவுள்ள பிஎன்ஜி, ஜிஃப், ஜேபக் அல்லது பிடிஎஃப் கோப்புகளாக மாற்றி பதிவேற்ற வேண்டும்.

உறுதிப்படுத்தல்

பயனர் கொடுத்திருக்கும் தகவல்களை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதில் டிக் செய்துவிட்டு பதிவு செய்க என்பதை கிளிக் செய்யவும்.

அனைத்தும் சரியாக பதிவு செய்து ஆவணங்களையும் இணைத்த பிறகு குறிப்பு எண் வழங்கப்படும். இந்த ரெஃபரன்ஸ் எண்ணைக் கொண்டு, உங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

Summary

About changing address on family cards online..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.