குடும்ப அட்டைகளில் பெயா் மாற்ற, திருத்தம் மற்றும் முகவரி மாற்ற திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் சனிக்கிழமையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.
இதன்படி வரும் சனிக்கிழமை 11 வட்டங்களில் குறைதீா் முகாம்கள் நடைபெறும்.
திருச்சி கிழக்கு வட்டத்தில் உடையான்பட்டி, திருச்சி மேற்கு வட்டத்தில் புத்தூா்-2, திருவெறும்பூா் வட்டத்தில் அரசன்குடி நியாய விலைக்கடை, ஸ்ரீரங்கம் வட்டத்தில் கிளிக்கூடு, மணப்பாறை வட்டத்தில் பண்ணப்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் இக்கரைக் கோசிக்குறிச்சி, லால்குடி வட்டத்தில் ஆா். வளனூா், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் வடக்கிப்பட்டி, முசிறி வட்டத்தில் வேளக்காநத்தம், துறையூா் வட்டத்தில் அமுதம்-1, தொட்டியம் வட்டத்தில் அரங்கூா் ஆகிய நியாய விலைக் கடைகளில் இந்த முகாம் நடைபெறும்.
காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் விண்ணப்பங்களை வழங்கிப் பயன் பெறலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







