FOLLOW US

ON GOOGLE DISCOVER

தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது!

தில்லியில் இளைஞர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது குறித்து...

News image

பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை கைது செய்து அழைத்துச் சென்றபோது... - Congress

Updated On :21 ஜூலை 2026, 6:43 pm IST

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 21) கைது செய்யப்பட்டார்.

பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரின் இல்லத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி செல்ல முயன்றதால் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரையும் கைது செய்து தனித்தனி வாகனத்தில் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலகக் கோரி தொண்டர்களுடன் இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், கேரள முதல்வர் வி.டி. சதீசன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் வீடு வரை பேரணியாகச் சென்ற அவர்கள், மோடியின் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரப்படுத்தும் வகையில், பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடும் வகையில் பேரணியாகச் சென்றனர். அப்போது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்.

முன்னதாக போராட்டத்தில் காயமடைந்த மாணவர்களை இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்தார். தொடர்ந்து, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக இன்று பேரணி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Rahul Gandhi arrested while protesting near the Prime Minister's residence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.