டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ. 96.28 ஆக நிறைவு!தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்குஷ்பு மகள் திருமணம்! த்ரிஷாவுக்கு புகைப்படக் கலைஞராக மாறிய பிரபல நடிகை!மக்கள்தொகைக் கணக்கெடுப்பு! இணையத்தில் நாமே பதிவிடலாம்! 33 கேள்விகள் என்னென்ன?சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

கட்சி நிகழ்ச்சி ஏற்பாடுகளின்போது பலியான தொண்டரின் குடும்பத்தினரைச் சந்தித்து ராகுல் ஆறுதல்

டேராடூனில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி....

News image

டேராடூனில் ராகுல் காந்தி.

Updated On :17 ஜூலை 2026, 7:36 pm IST

டேராடூனில் கட்சி நிகழ்ச்சி ஏற்பாடுகளின்போது பலியான காங்கிரஸ் தொண்டரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள பன்னு பள்ளித் திடலில் மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலிலிருந்து இரும்புத் தடி ஒன்று விழுந்ததில் அமர் மேத்தா(65) வியாழக்கிழமை பலியானார்.

இந்த நிலையில் பலியான காங்கிரஸ் தொண்டரின் இல்லத்திற்கு வெள்ளிக்கிழமை சென்ற ராகுல் காந்தி, அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்த தகவல் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டேராடூன் அருகிலுள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்கு வந்தடைந்த ராகுல் காந்திக்குக் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ​​பத்ரிநாத் ஆலயத்துடன் தொடர்புடைய பிர்ச் மரப்பட்டை கொண்டு செய்யப்பட்ட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

மாணவர்களின் குரல் நிகழ்ச்சியின்போது, ​​கல்வி, வேலைவாய்ப்பு, வினாத்தாள் கசிவு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி மாணவர்களுடன் கலந்துரையாடுவார் எனத் தெரிகிறது.

Summary

Senior Congress leader Rahul Gandhi on Friday met the family of a party worker who died in a freak accident in Dehradun when preparations were underway for a party event.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.