சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கற்பனை செய்ய முடியாத வேதனையில் மணிப்பூர்; பிரதமர் மௌனம்: ராகுல்

மணிப்பூரில் மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில், மத்திய பாஜக அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Rahul Gandhi

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :2 ஜூலை 2026, 6:31 pm IST

மணிப்பூரில் மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில், மத்திய பாஜக அரசு மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "மணிப்பூர், பல ஆண்டுகளாக எரிந்து வருகிறது. மீண்டும் இன்று வெறுப்பு மற்றும் வன்முறையின் நெருப்பால் 20 வீடுகள் சாம்பலாகிவிட்டன.

இரட்டை என்ஜின் அரசு, குடியரசுத் தலைவர் ஆட்சி இருந்தபோதிலும், மாநிலத்தில் மோதல் போக்கு தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர், எண்ணற்ற குடும்பங்கள் அழிந்துவிட்டன.

கற்பனைகூட செய்ய முடியாத வேதனையை மணிப்பூர் அனுபவித்து வருகிறது.

மதம், சாதி, மொழி, பிராந்தியம், அடையாளம் ஆகியவற்றின் பெயரில் மக்களைப் பிளவுபடுத்தும் மோடி அரசின் பிளவுபடுத்தும் கொள்கையின் விளைவாகவே இந்த மோதல் நீடிக்கிறது.

மணிப்பூர் குறித்து ஏதேனும் இரண்டு அனுதாப வார்த்தைகளாவது பிரதமரிடமிருந்து வேண்டும் என்ற நம்பிக்கை இன்று முற்றிலும் மறைந்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.

Summary

Result of Modi govt’s divisive ideology, says Congress MP Rahul Gandhi after fresh violence in Manipur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.