புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

குடும்ப அட்டைதாரா்கள் கட்டாயம் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும்! மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

ration card

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Published On :

திருப்பூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் தங்களின் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களில் தற்போது வரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவா்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் கைவிரல் ரேகையை வரும் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதியில் வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இறந்த உறுப்பினா்களின் பெயா்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமா்ப்பித்து நீக்கம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அருகில் உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினா்களின் குடும்ப அட்டை எண்ணுடன் ஆதாா் அட்டை நகலை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.