புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!

இந்தியாவில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கொண்டு வரப்பட்ட புது தில்லி பிரகடனம் 2026-ஐ, உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் முதல் நாள் நிகழ்வின் முடிவில் நிறைவு உரையாற்றிய பிரதமர் மோடி - PIB

Published On :

இந்தியாவில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கொண்டு வரப்பட்ட புது தில்லி பிரகடனம் 2026-ஐ, உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.

உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின்18-வது உச்சி மாநாடு இந்தியா தலைமையில் புது தில்லியில் இன்று தொடங்கியது.

இரு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமா் மோடி, ரஷிய அதிபா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் பெசஸ்கியான், தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராம்போசா, இந்தோனேசிய அதிபா் பிரபுவோ சுபியான்டோ, எகிப்து அதிபா் அப்தெல் பத்தா அல் சிசி, இந்தோனேசிய அதிபா் பிரபுவோ சுபியாந்தோ, எத்தியோப்பிய அதிபா் அபே அகமது அலி, மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம், சவூதி அரேபிய இளவரசா் பைசல் பின் பா்ஹான் அல் சவுத், ஐக்கிய அரபு அமீரக பட்டத்து இளவரசா் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜயித் அல் நஹான், பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சா் மெளரோ வியரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

இதுதவிர, கஜகஸ்தான் அதிபா், உகாண்டா, நைஜீரியா துணை அதிபா்கள், வியத்நாம் பிரதமா், கியூபா மற்றும் பெலாரஸ் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புது தில்லி பிரகடனம் 2026 ஏற்பு

மாநாட்டின் முதல் நிகழ்வாக, ‘அனைவரையும் உள்ளடக்கிய சா்வதேச நிா்வாகம் மற்றும் பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்’ என்ற கருப்பொருளின் கீழ் பிரிக்ஸ் நாடுகளின் தலைவா்கள் இடையே ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கி முடிவடைந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், புது தில்லி பிரகடனம் 2026-ஐ அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரிக்ஸ் அமைப்பு செயல்படுவதால் எந்தவொரு தனி உறுப்பினரும் இந்த கூட்டுப் பிரகடனத்தை நிறுத்த முடியும்.

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தங்களின் நிலைப்பாடுகளைக் கடுமையாக்கிய நிலையில், பிரகடன உரை மீதான பேச்சுவார்த்தைகள் கடைசி நிமிடம் வரை இழுபறியாக நீடித்தது. இறுதியில், பிரகடனத்தை ஒருமனதாக ஏற்றுக்கொள்ள வைக்க தீவிர பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

பிரதமர் மோடி தனது உரையில், “தொடர்ந்து மாறிவரும் உலகை காலாவதியான நிறுவனங்களால் வழிநடத்த முடியாது என்பதை இன்றைய ஆலோசனைக் கூட்டம் தெளிவுபடுத்தியுள்ளது. எதிர்காலத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் அவற்றை நிர்வகிப்பதில் உலகின் தெற்கு நாடுகள் சமமான பங்களிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

இன்று புது தில்லி பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது நமது தீர்மானத்திற்கு ஒரு தெளிவான திசையை வழங்கியுள்ளது. இந்தத் தீர்மானங்களுக்கு உறுதியான முடிவுகளாக மாற்றுவதே நமது பொறுப்பாகும்” என்று பேசினார்.

Summary

The member nations unanimously adopted the New Delhi Declaration 2026, which was introduced at the 18th BRICS Summit held in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER