
பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வர்கள்! ஆச்சரிய தகவல்!!
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு பற்றிய ஆச்சரிய தகவல்கள்
சீன அதிபா் ஷி ஜின்பிங் - IANS
நாட்டின் தலைநகர் புது தில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், உலகத் தலைவர்கள் தங்க வைக்கப்படும் நட்சத்திர விடுதி, உச்சி மாநாடு நடைபெறும் அரங்கங்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புது தில்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-ஆவது உச்சிமாநாடு சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியாவுக்கு 7 ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகை தருகிறார். உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று பிற்பகலில் புது தில்லி வந்தடையும் ஷி ஜின்பிங்-உடன் அமைச்சர், அதிகாரிகள் என 67 பேர் வருகிறார்கள். அவருக்கான சிறப்பு பாதுகாப்புகள், உணவுத் தயாரிப்புகள் குறித்த பல ஆச்சரிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
பிரதமா் மோடியால் இன்று இரவு உலக தலைவர்களுக்கு பிரமாண்ட விருந்து வழங்குகிறார். இந்த விருந்தில் சீன அதிபருக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் அந்நாட்டு அதிகாரிகள் ஏற்கனவே பட்டியல் அளித்திருக்கிறார்களாம்.
மேலும், இந்திய அதிகாரிகளிடம், சீனா ஒரு கோரிக்கையை முன்வைத்தது. அதாவது, சீன ருசி தேர்வாளர்களை, சீன அதிபருக்கான உணவு தயாரிக்கும் உணவுக் கூடத்தில் அனுமதிக்கவும், சீன அதிபருக்கு வழங்கப்படும் உணவுகளை அவர்கள் முன்கூட்டியே ருசி பார்த்து, அவரது உணவு முறைக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்வார்கள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீன அதிபருக்கான உணவு மெனுவில், சிறு தானிய உணவுகள் அதிகம் இடம்பெறும் என்றும், பொதுவாக அவரது உணவு எளிமையான சைவ உணவாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளதாம்.
சரியாக 24 மணி நேரம் ஷி ஜின்பிங் இந்தியாவில் தங்கியிருப்பார் என்றும், ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் அவர் சீனா புறப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
அவர் வருவதற்கு 10 நாள்களுக்கு முன்பே, அவர் பயன்படுத்தும் கார், தொலைத் தொடர்பு சாதனங்கள் போன்றவை இந்தியாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம்.
7 ஆண்டுகளுக்கு முன்...
சீன அதிபர் ஷி ஜின்பிங் இதற்கு முன்பு, கடந்த 2019-இல் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் பிரதமா் மோடி உடனான சந்திப்பில் பங்கேற்க இந்தியா வந்திருந்தாா். அதற்கு முன்பு கடந்த 2016-இல் கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தாா். இப்போது 7 ஆண்டுகளுக்குப் பின் ஷி ஜின்பிங் இந்தியாவுக்கு வரவுள்ளாா்.
Summary
BRICS Summit Food tasters accompanying Chinese President surprising details
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





