
பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்!
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் தில்லி வந்தடைந்தார்...

பிரதமர் மோடி | சீன அதிபர் ஜின்பிங் - கோப்புப் படம்
18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் தில்லிக்கு வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் உலக நாடுகள் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு தில்லியில் இன்று (செப். 12) தொடங்குகிறது. இந்திய அரசின் தலைமையில் செப். 13 வரை 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜின்பிங் இன்று காலை தில்லிக்கு வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சீன அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களும் வருகை தந்துள்ளனர்.
இதையடுத்து, விமான நிலையத்தில், சீன அதிபர் ஜின்பிங் தலைமையிலான குழுவினருக்கு இந்திய அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பயணத்தில், சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடவுள்ளார். இந்தச் சந்திப்பில், இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக, 2019 இல் சென்னை அருகிலுள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடனான மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that Chinese President Xi Jinping has arrived in Delhi to participate in the 18th BRICS Summit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






