மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

‘கருத்து வேறுபாடுகளை முறையாக கையாள வேண்டும்’: மோடி-ஜின்பிங் சந்திப்பையொட்டி சீனா கருத்து

பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்த உள்ள நிலையில், இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை இருநாடுகளும் முறையாக கையாள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

சீனா - இந்தியா - கோப்புப் படம்

Published On :

பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்த உள்ள நிலையில், இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை இருநாடுகளும் முறையாக கையாள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங் சனிக்கிழமை இந்தியா வரவுள்ளாா். அப்போது அவா் பிரதமா் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவாா்த்தையிலும் ஈடுபட உள்ளாா்.

இதையொட்டி சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் மாவ் நிங் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளில் ரஷியாவின் கசான், சீனாவின் தியான்ஜின் பகுதிகளில் மோடியும், ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினா். தற்போது தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக, பிரிக்ஸ் மாநாட்டின்போது இருவரும் சந்திக்க உள்ளனா்.

அவா்கள் அளித்த உத்திசாா்ந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்துதல், இருதரப்பு உறவுகளை கையாளுதல், இருநாட்டு ஒத்துழைப்பு மற்றும் தகவல் தொடா்பை மேம்படுத்துதல், இருநாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை முறையாக கையாளுதல் உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் இணைந்து சீனா பணியாற்றும்.

பிரிக்ஸ் வழிமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தற்போதைய சா்வதேச சூழல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, பிரிக்ஸ் மாநாட்டின்போது பிற நாட்டுத் தலைவா்களுடன் ஆழமான கருத்து பரிமாற்றத்தில் ஷி ஜின்பிங் ஈடுபட உள்ளாா்.

நீடித்த, நிலையான முன்னேற்றத்துக்காக பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாா் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.