தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!

உக்ரைனில் ஐரோப்பிய படைகள் நிலைநிறுத்தப்படுவது ரஷியா உடன் போருக்கு வழிவகுக்கும் என அதிபர் புதின் எச்சரிக்கை...

Russian President Vladimir Putin

பிரிக்ஸ் மாநாட்டில் செய்தியாளர்களுடன் பேசும் ரஷிய அதிபர் புதின்... - AP

Published On :

உக்ரைனில் ஐரோப்பிய படைகள் நிலைநிறுத்தப்படுவது ரஷியா உடனான போருக்கு வழிவகுக்கும் என ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தில்லியில் நடைபெறும் 18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்து உரையாடி வருகிறார்.

இந்த நிலையில், செய்தியாளர்களுடன் இன்று (செப். 12) பேசிய அதிபர் புதின், ஐரோப்பிய நாடுகள் உடன் மோதல்களை விரும்பவில்லை என்றும்; ஆனால், உக்ரைனில் ஐரோப்பிய படைகள் நிலைநிறுத்தப்படுவது ரஷியா உடனான போருக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

“நாங்கள் (ரஷியா) ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தவில்லை. இனி அச்சுறுத்தவும் போவதில்லை. நாங்கள் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஐரோப்பிய நாடுகளுடன் மோதல்களைத் தொடங்க எங்களுக்கு எந்தவொரு காரணமும் இல்லை என்பதை யாரும் கருத்தில் எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை.

ஆனால், இப்போது அவர்கள் (ஐரோப்பிய நாடுகள்) உக்ரைனில் தங்களின் படைகளை நிலைநிறுத்துவது குறித்து சிந்திப்பதாகக் கூறுகின்றனர். இதன் பொருள் ரஷியா உடன் போர் என்பதாகும்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷியா தொடுத்துள்ள போரில், ஏராளமான ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. மேலும், இந்தப் போரில் இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படுவதாக அமெரிக்க அரசு கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Russian President Vladimir Putin has warned that the deployment of European troops in Ukraine would lead to a war with Russia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.