ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் புதின் குறித்து...

Russian President Vladimir Putin has arrived in New Delhi today to participate in the 18th BRICS Summit

தில்லி விமான நிலையம் வந்த புதினை வரவேற்ற வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங். - எக்ஸ்

Published On :

புதுதில்லி: பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காகவும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை காலை(செப்.11) தில்லி வந்தார். புதினுடன் உயர்மட்டக் குழுவினர் வந்துள்ளனர்.

பிப்ரவரி 2022-இல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷியாவுக்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் புதின் நேரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

தில்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சிமாநாடு சனிக்கிழமை(செப்.12) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 முக்கிய பொருளாதார நாடுகள் அங்கம் வகிக்கும் சனிக்கிழமை தொடங்கும் இரண்டு நாள் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது.

உணவு, எரிசக்தி, சுகாதாரம், பேரிடர் குறைப்பு மற்றும் முக்கியமான விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றில் கூட்டுத் திறனை மேம்படுத்துவதில் இந்தமாநாடு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிதறிய புவிசார் அரசியல் சூழலைக் கையாள்வதில் இந்த அமைப்பை ஒரு பயனுள்ள சக்தியாக இந்தியா முன்னிறுத்துகிறது.

ரஷியா-உக்ரைன் போரின் பாதிப்புகள், மேற்கு ஆசிய நெருக்கடி (குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை முடக்க நிலை) மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகம் மற்றும் சுங்கவரி கொள்கைகள் ஆகியவற்றால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் புது தில்லியில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காகவும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை காலை(செப்.11) தில்லி வந்தடைந்தார்.

புதினுடன் உயர்மட்டக் குழுவினர் வந்துள்ளனர்.

தில்லி விமான நிலையம் வந்த புதின் மற்றும் உயர்மட்டக் குழுவினரை வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வரவேற்றார்.

ரஷியத் தலைவரை வரவேற்ற வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவும் ரஷியாவும் சிறப்பு மற்றும் முன்னுரிமை வாய்ந்த மூலோபாயக் கூட்டாண்மையின் அடிப்படையில் பல பரிமாண மற்றும் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளன என்று கூறினார்.

இந்தியா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையே 'சிறப்பு மற்றும் முன்னுரிமை வாய்ந்த உத்திசார் கூட்டாண்மை'யின் அடிப்படையில் பல பரிமாணங்களைக் கொண்ட நீண்டகால உறவுகள் நிலவுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் புதினும் வெள்ளிக்கிழமை பிற்பகல் விரிவான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.

பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் மக்கள் இடையிலான பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் போது மோடியும் புதினும் சந்தித்துப் பேசினர்; அப்போது, ​​மோதல் உடனடியாக முடிவுக்கு வருமாறு வலியுறுத்திய பிரதமர் மோடி, "முடிவில்லாத போரிலிருந்து போரை முடிவுக்குக் கொண்டுவரும் நிலையை நோக்கி" மாறுமாறு ரஷியத் தலைவரைக் கேட்டுக்கொண்டார்.

Summary

Russian President Vladimir Putin has arrived in New Delhi today to participate in the 18th BRICS Summit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.