நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

குமரியில் குடும்ப அட்டைதாரா்கள் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் விரல் ரேகை பதிவுக்கு சனிக்கிழமை (ஆக. 29) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ration card

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 6:03 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் விரல் ரேகை பதிவுக்கு சனிக்கிழமை (ஆக. 29) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாட்டின் கீழ் உள்ள ரேஷன் அட்டைகளில் அனைத்துப் பயனாளிகளின், நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன் அட்டைதாரா்கள் தங்களது நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். விரல் ரேகை பதிவாகவில்லை என்றால் கருவிழி பதிவு செய்து கொள்ளலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விரல் ரேகை பதிவு 100 சதவீதத்தை நிறைவு செய்யும் வகையில் சனிக்கிழமை (ஆக. 29) அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, இதுவரை பதிவு செய்யாத, விடுபட்ட குடும்ப உறுப்பினா்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.