தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ஹோர்முஸ் நீரிணை விரைவில் அமெரிக்க பகுதியாக அறிவிப்பு! - டிரம்ப் பேச்சு!

ஹோர்முஸ் நீரிணையை விரைவில் அமெரிக்க பகுதியாக அறிவிப்பேன் என அதிபர் டிரம்ப் பேச்சு...

News image

அமெரிக்க அதிபா் டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 1:05 pm IST

ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை விரைவில் அமெரிக்க பகுதியாக அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப்.28 அன்று அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, இருதரப்புக்கும் இடையிலான போரில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியும், வளைகுடா நாடுகளிலுள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியும் ஈரானிய படைகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருதரப்பும் மீண்டும் போரில் களமிறங்கியுள்ளன. ஆனால், இந்தப் போரில் ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றுவதற்கே அமெரிக்க படைகள் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை விரைவில் அமெரிக்காவின் பகுதியாக அறிவிப்பேன் என நியூயார்க்கில் நேற்று (ஆக. 14) அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“ஏற்கெனவே மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டு வரும் ஈரானை முழுவதுமாகத் தோற்கடித்தவுடன், விரைவில் நான் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பகுதியாக அறிவிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் உடனான போரில் ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றி கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதுதான் முதல் இலக்கு என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

US President Donald Trump has stated that he will soon declare Iran's Strait of Hormuz as US territory.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.