மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

நீட் வேண்டாம் என நினைக்கும் மாநிலத்துக்கு முழு விலக்கு என்று சொன்னவர் ராகுல்: காங்கிரஸ்

சட்டப்பேரவையில் நடைபெற்ற நீட் விவகாரம் குறித்து மாணிக்கம் தாகூர் தெரிவித்தது குறித்து...

News image

ராகுல் காந்தி - படம்: எக்ஸ்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 8:18 am IST

நீட் வேண்டாம் என நினைக்கும் மாநிலத்துக்கு முழு விலக்கு அளிக்கப்படும் என்று, ராகுல் காந்தி உறுதியளித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”சட்டப்பேரவையில் நீட் விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேஷ் குமார் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்!

எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் மீது வீண் பழி போட்டு உங்கள் வரலாற்றுத் துரோகத்தை மறைக்க முடியாது!

மறைந்த ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாத நீட் தேர்வு, நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, அதிமுகவை பாஜகவின் காலடியில் அடகு வைத்த பிறகு 2017-ல் தான் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது! தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது காங்கிரஸ் அல்ல, உங்கள் அடிமை ஆட்சிதான். இந்த வரலாற்று உண்மையை உங்களால் எப்போதும் மறைக்க முடியாது.

ஏழை, எளிய மாணவர்களின் நலனை முன்னிறுத்தித் திட்டங்களை யோசித்தாலும், மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முடிவுகளை மாற்றிக்கொள்ளும் இயக்கம் காங்கிரஸ். காலின் அளவுக்குத் தக்கபடிதான் காலணியைத் தைக்க வேண்டுமே தவிர, காலணிக்காக காலை வெட்ட முடியாது!

ஆனால் பாஜக அரசோ ‘குரங்கு கையில் கிடைத்த பூமாலை’ போல, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் என்டிஏ( NTA) என்ற ஒரே அமைப்பிடம் கொடுத்து, வினாத்தாள் கசிவு, ஊழல், பயிற்சி மைய மாஃபியாக்கள் என நீட் தேர்வை வணிகச் சந்தையாக்கிவிட்டது. அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்களின் உயிர்கள் பறிபோயும் ‘பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என மோடி அரசு பிடிவாதம் பிடிக்கிறது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உறுதியளித்தபடி, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவானது: "எந்த மாநிலத்திற்கு நீட் வேண்டாம் என்று நினைக்கிறதோ, அந்த மாநிலத்திற்கு முழு விலக்கு அளிக்கப்படும்." இதை உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சொல்ல வைக்க முடியுமா?

பாஜகவின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்து, மாணவர்களின் நலனுக்காக "தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்" என்று மோடி அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சல் இப்போதாவது உங்களுக்கு இருக்கிறதா?” என்று மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Tamil Nadu Congress leader Manickam Tagore has stated that Rahul Gandhi assured a complete exemption for states that do not want NEET.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.