தில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம்கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தில்லியில் ஜூலை 20 ஆம் தேதியில் நீட் போராட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? என கேள்வியும் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்கோரி, மக்களவை பொதுச் செயலாளருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, தில்லியில் மாணவர்களின் போராட்டத்தில் நடந்த அரசியல் நடவடிக்கை தொடர்பான மற்றும் மிக அவசரமான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை விவாதிப்பதற்காக தீர்ப்பாணைகோரி மனுவைத் தாக்கல் செய்கிறேன்.
மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கைக்கு யார் அதிகாரம் அளித்தது? யாருடைய வழிகாட்டுதலின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக நியாயமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகள், பொதுமக்களிடையே பரவலான கவலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பேச்சு, கருத்துச் சுதந்திரம், அமைதிப் போராட்டம், சட்ட அமலாக்க அமைப்புகள் மீதான நம்பிக்கை முதலிய உத்தரவாதங்கள் தொடர்பான பிரச்னைகளை எழுப்புகின்றன. இந்தப் பிரச்னைகளை ஆராய்ந்து, அதற்கான அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வது அவையின் கடமையாகும்.
ஆகையால், இந்த விவகாரம் குறித்து உடனடி விவாதம் நடத்துவதற்காக, அவையின் வழக்கமான அலுவல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டும். மேலும், இந்த சம்பவம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரு விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Summary
Manickam Tagore MP gives Adjournment Motion Notice in Lok Sabha demanding a Statement by the Amit Shah on the Police Action During the Student Protest
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மோடி அரசு, பணக்காரர்களுக்கானது! ரமணா பட பாணியில் மாணிக்கம் தாகூர் பேச்சு!
ராகுல் பேச அனுமதி மறுப்பு! ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையும்: மாணிக்கம் தாகூர்

மாணவர்கள் மீது தடியடி! அமித்ஷாவுக்கு தொலைபேசியில் வந்த லைவ் அப்டேட்! - ராகுல் குற்றச்சாட்டு
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்வி
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



