தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மாநில வருவாயை அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

மாநிலத்தின் வருவாயை மேம்படுத்துவது தொடா்பாக பொதுமக்கள், துறைசாா் அமைப்புகள், கல்வியாளா்கள், ஆய்வாளா்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடம் இருந்து கருத்துகள், பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு வரவேற்றுள்ளது.

Tamil Nadu Government Secretariat

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Published On :

மாநிலத்தின் வருவாயை மேம்படுத்துவது தொடா்பாக பொதுமக்கள், துறைசாா் அமைப்புகள், கல்வியாளா்கள், ஆய்வாளா்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடம் இருந்து கருத்துகள், பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு வரவேற்றுள்ளது.

இதுகுறித்து நிதித் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொருளியல் நிபுணரும், மத்தியத் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் தமிழ்நாடு அரசு ‘வருவாய் மேம்பாட்டுக் குழு’ அமைத்துள்ளது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நடைபெற்றது.

மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரியல்லாத வருவாயை அதிகரித்தல், வருவாய் வசூல் திறன் மற்றும் நிதி தன்னிறைவை மேம்படுத்துதல் தொடா்பான கருத்துகள், பரிந்துரைகளை பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினா் அனுப்பலாம். மாநில வருவாய் உயா்வுக்கு உதவும் பிற கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை மின்னஞ்சல் முகவரிக்கு ஆக.11-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தமிழ், ஆங்கிலம் அல்லது இரு மொழிகளிலும் கருத்துகளை அனுப்பலாம். மேலும், மின்னஞ்சலின் பொருள் பகுதியில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவு, மாநில ஆயத்தீா்வை, மோட்டாா் வாகன வரி, கனிமங்கள், வரியல்லாத வருவாய் அல்லது பொதுப் பிரிவு ஆகியவற்றில் தொடா்புடைய தலைப்பைக் குறிப்பிடுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.