உரிமைகளுக்காக போராடும் ஜென் ஸீ தலைமுறையினர் தேச விரோதிகள் அல்லர் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இன்று (ஆக. 6) தெரிவித்தார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இளைஞரின் கேள்விக்கு மோகன் பாகவத் பதில் அளித்ததாவது:
’’நான் என்ன சொல்கிறேன் என்றால், 'ஜென்-ஸீ' (Gen Z) தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்கள் தேச விரோதிகள் அல்ல. அவர்கள் நம் சொந்த மக்கள்.
நம் அடுத்த தலைமுறையினர். அந்த சொந்த உணர்வுடன், அவர்களுடன் பேச்சுவார்த்தையும் தேவை என்று நான் கூறினேன்; இளம் தலைமுறை உடனான ஒரு பிணைப்பு அவசியம். அதுதான் நம்மிடையேயான உறவு; அந்த உறவு அங்கீகரிக்கப்பட வேண்டும்.
எது நடந்திருந்தாலும் ஜென் ஸீ தலைமுறையினரின் கோரிக்கை நியாயமானது. இந்திய கல்வி முறையில் இன்னும் அதிக சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. அது நடக்காததால் அது பற்றி பேசப்படுகிறது.
போராட்டம் என்பதும் ஒரு வகையான உரையாடல்தான். நாம் இங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். விஷயங்கள் இப்படியே புரிந்துகொள்ளப்பட்டால் நல்லது. இல்லையென்றால், நமக்குள் விவாதம் ஏற்படும்.
உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தாலோ அல்லது எனக்கு ஏதேனும் சிரமம் இருந்தாலோ, அதைத் தீர்ப்பது உங்கள் கையிலோ அல்லது என் கையிலோ இருந்தும்கூட அது நடக்கவில்லை என்றால், குரல் எழுப்ப வேண்டியது கட்டாயம்’’ எனக் குறிப்பிட்டார்.
Summary
Gen Z protesting not anti-national their greivances are genuine RSS chief Mohan Bhagwat
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொள்ளாச்சி அருகே நண்பனைக் கொன்று செல்ஃபி எடுத்த ஜென் ஸீ-க்கள்!

தமிழ்நாடு பட்ஜெட்! ஜென் ஸீ-க்களுக்கான அறிவிப்புகள் என்னென்ன?

ஜென் ஸீ, ஜென் ஆல்ஃபா தலைமுறையினருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் கலந்துரையாடல்!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல் வீச்சு!
விடியோக்கள்

சர்க்கரை உண்மையிலேயே தவிர்க்கப்பட வேண்டியதா? | Health Care | Lifestyle




