போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல் வீச்சு!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயிலின் மீது கல் வீச்சு

News image

மோகன் பாகவத் - கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 9:07 am IST

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயிலின் மீது கல்லெறிந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய தலைவரான மோகன் பாகவத், கான்பூரிலிருந்து தில்லி நோக்கிச் சென்ற ஸ்வர்ண சதாப்தி விரைவு ரயிலில் (12003) வியாழக்கிழமை பயணம் செய்தார்.

இந்த நிலையில், ஃபிரோசாபாத் மாவட்டம் வழியாகச் சென்றபோது, மோகன் பாகவத் இருந்த இ-1 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல் எறிந்துள்ளார். கல் எறிந்ததில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஆக்ரா மண்டல கூடுதல் டிஜிபி, ஆக்ரா சரக டிஐஜி ஆகியோர் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், ரயில் பெட்டியின் மீது கல்லெறிந்த அடையாளம் தெரியாத நபரை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Summary

Stone pelted at Shatabdi Express near Firozabad with RSS Chief Mohan Bhagwat on board

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.