அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

உங்கள் ஆசிர்வாதத்தில் என்னுடைய புது வாழ்க்கை தொடரும்: ரவி மோகன்

இணையத்தில் கவனம் பெறும் ரவி மோகன் பேச்சு...

News image

ரவி மோகன்

Updated On :7 ஜூலை 2026, 3:36 pm IST

நடிகர் ரவி மோகன் தன் திரைப்படங்கள் மற்றும் புதிய முடிவுகள் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பதால் கடந்த ஓராண்டாகவே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளார். மனைவியைப் பிரிந்தவர் பாடகி கெனிஷாவுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பொது நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துகொள்வது; புரமோஷன்களுக்கு வருவது என ஜோடியாக இருந்தனர்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் கெனிஷா, எனக்கு யாரும் வேண்டாம் என ரவி மோகனையும் பிரிந்தார். இதுகுறித்து பேசிய ரவி மோகன், எனக்கு ஆதரவாக இருந்த கெனிஷாவும் சென்றுவிட்டார்; எனக்கு, விரைவாக விவாகரத்து வேண்டும். அதுவரை திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றார்.

இந்த நிலையில், விருது நிகழ்வில் பேசிய ரவி மோகன், “எனக்கு 46 வயதாகிவிட்டது. அதில் பாதியாண்டுகள் சினிமாவில்தான் இருந்திருக்கிறேன். என் சொந்த வாழ்க்கையில் நான் செய்த தவறு உங்களைக் காயப்படுத்தியதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், நீங்கள் கொடுத்த அன்பினால் நெகிழ்ந்துவிட்டேன். நீ என்ன வேண்டுமானாலும் சொல், திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று மட்டும் சொல்லாதே எனப் பலரும் கேட்டுக்கொண்டனர். அன்றிலிருந்து அதை வேத வாக்காக எடுத்துக்கொண்டேன்.

நீங்கள் விரும்பிய குமரனாக, துருவனாக, தனி ஒருவனாக, பொன்னியின் செல்வனாக கண்டிப்பாக நான் திரும்பி வருவேன். இனிமேல் தவறு நடக்காது. உங்கள் ஆசிர்வாதத்தால் என் புது வாழ்க்கை தொடரும்” எனக் கூறியுள்ளார்.

Actor Ravi Mohan has spoken about his films and new decisions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.