நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டாடா திரைப்பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்துள்ள புதிய படம் “கராத்தே பாபு”. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
சாம் சி.எஸ். இசையமைத்துள்ள படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இப்படத்தில், நடிகர் ரவி மோகன் முதல்முறையாக அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில், நடிகர்கள் நாசர், கே.எஸ். ரவிக்குமார், காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி, டாவ்டி எஸ். ஜிவால், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை வெளியிட்டு, தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டுளது. இதன்படி, வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Summary
The film crew has released the poster announcing the release date of actor Ravi Mohan's movie Karate Babu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!
வீட்டு பணிப்பெண்களைச் சிறைப்பிடித்த ரவி மோகன்?
ரவி மோகனின் கராத்தே பாபு பட முதல் பாடல் வெளியீடு!
ரவி மோகனின் கராத்தே பாபு பட முதல் பாடல்! புரோமோ வெளியீடு!
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan


