நடிகர் ரவி மோகன், தான் இயக்கிய ஆன் ஆர்டினரி மேன் படத்தின் காட்சிகளைப் பார்த்து தனது குடும்பத்தினர் உற்சாகமளித்தது பற்றி பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பதால் கடந்த ஓராண்டாகவே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளார். மனைவியைப் பிரிந்து பாடகி கெனிஷாவுடன் இணைந்து அவர் வாழ்ந்து வந்தார். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஜோடியாக கலந்துகொண்டனர்.
ஆனால், சில மாதங்களுக்கு முன் கெனிஷா, தனக்கு யாரும் வேண்டாம் என ரவி மோகனை பிரிந்தார். இதனைத் தொடர்ந்து, விவாகரத்து கிடைக்கும் வரை திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று ரவி தெரிவித்திருந்தார். ஆனால், ரசிகர்களின் கோரிக்கைகளுக்காக மீண்டும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், யோகி பாபு நடிப்பில் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ஆர்டினரி மேன் படம் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “என் குடும்பத்தினரை நேற்று இரவு சந்தித்து, நான் முதன்முதலாக இயக்கியுள்ள ’ஆன் ஆர்டினரி மேன்’ (An Ordinary Man) திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சியையும், பாடலையும் அவர்களிடம் காண்பித்தேன். இந்தப் படம் முழு மனதுடன் உங்களிடம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
எனது குடும்பத்தினர் எனக்குக் கொடுத்த உற்சாகம், குறிப்பாக எனது அப்பா எனக்குக் கொடுத்த ஆதரவு இந்த உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தங்கள் பெற்றோரிடமிருந்து கிடைக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Summary
The cheers my family gave me: Ravi Mohan moved!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயிரோடு இருக்கும் வரை இனி சேரப்போவதில்லை: ரவி மோகன்
உங்கள் ஆசிர்வாதத்தில் என்னுடைய புது வாழ்க்கை தொடரும்: ரவி மோகன்
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!
வீட்டு பணிப்பெண்களைச் சிறைப்பிடித்த ரவி மோகன்?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




