நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேசியதாவது, "எதிர்க்கட்சித் தலைவருக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு உரிமையுண்டு. ஆனால், நாடாளுமன்றத்தில் புதன்கிழமையில் ராகுல் காந்தி தனது உரையை முடிக்கை அனுமதிக்கப்படவில்லை.
இதுவரையில் இப்படி நடந்ததில்லை. இது நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் மீதான தாக்குதல். எதிர்க்கட்சித் தலைவர் தனது விருப்பத்தைச் சொல்வதற்கு உரிமையுண்டு. அதற்கு அரசும் பதிலளிக்க வேண்டும். இந்தியா ஜனநாயக நாடு.
ஆனால், ராகுல் காந்தி பேசுவதற்காக எழுந்து நிற்கும்போது, பாஜக அமைச்சர்களும் எம்.பி.க்களும் ஏதேனும் தொந்தரவு செய்கின்றனர். அவரைப் பேச அனுமதிப்பதில்லை. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையும்" என்று தெரிவித்தார்.
தில்லியில் புதன்கிழமை (ஜூலை 29) நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீட் போராட்டம் குறித்து ராகுல் காந்தி பேசினார். இந்த விவாதத்தின்போது ஆர்எஸ்எஸ் குறித்து அவர் பேசியதாகவும், அவர் பேசியது நாடாளுமன்ற மரபுக்கு ஏற்றதாக இல்லை என்றும் பாஜகவினர் கூறினர். இதனையடுத்து, ராகுல் காந்தி கூறிய குறிப்பிட்ட கருத்து அவைக் குறிப்பிலிருந்து நீக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
Summary
Leader of Opposition has the right to speak in the Parliament, says Congress MP Manickam Tagore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணிக்கம் தாகூர், நயினார் நாகேந்திரன் மீதான வழக்குகள் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மூச்சுவிடவும் டோக்கன் வாங்க வேண்டுமா? பாஜக அரசுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி
கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
அமைச்சர் பெ. விஸ்வநாதன் மீது புகார்: நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager


