2024 மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின், ஏப்ரல் 18 ஆம் தேதி தனது முகநூலில் பிரசாரம் மேற்கொண்டதாக, மாணிக்கம் தாகூர் மீது விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மாணிக்கம் தாகூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 188-வது சட்டப்பிரிவின் படி, அரசு ஊழியர் எழுத்துப்பூர்வ புகார் அளித்திருந்தால் மட்டுமே தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மாணிக்கம் தாகூர் கோரிக்கையை ஏற்து, அவருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதேபோல, திருநெல்வேலி மக்களவை தொகுதியில் 2024-ஆம் ஆண்டு தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திருநெல்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். திருநெல்வேலி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நயினார் நாகேந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, நயினார் நாகேந்திரன் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Summary
Cases against Manickam Tagore and Nainar Nagendran quashed: Madras High Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 2,500 உரிமைத் தொகை எப்போது? யாரை ஏமாற்ற முயற்சிக்கிறது தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK
அமைச்சர் பெ. விஸ்வநாதன் மீது புகார்: நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்
விடியோக்கள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் கண்ணீர்



