நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுகிறது.
பட்டமளிப்பு விழாவில் மேடையில் ஆளுநரிடம் இருந்து இருந்து நேரடியாக பட்டம் மற்றும் பதக்கங்களைப் பெற 871 பேர் தகுதி பெற்றிருந்தனர். அதாவது 163 ஆண்கள், 595 பெண்கள் என மொத்தம் 758 டாக்டர் படிப்பு முடித்தவர்களும், 12 ஆண்கள், 101 பெண்கள் என 113 பதக்க வெற்றியாளர்களும் நேரடியாக ஆளுநரிடம் பட்டம் பெறுவார்கள் என பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூறியிருந்தனர்.
ஆனால் பதக்கங்கள் பெறுவதற்கு தகுதியான முதுகலை படிப்பில் 60 பேருக்கும், இளநிலை படிப்பில் 53 பேருக்கும் என 113 பேருக்கு மட்டும் தங்க பதக்கங்கள் மற்றும் பட்டங்களை ஆளுநர் வழங்கினார்.
உடல்நிலை காரணமாக தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு மட்டும் ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் ஆத்திரமடைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், "முனைவர் பட்டம் பெற நாங்கள் காலை 4 மணிக்கு எல்லாம் எங்களது வீட்டில் இருந்து புறப்பட்டு ஆளுநரின் கையால் பட்டம் பெற போகிறோம் என்ற ஆசையுடன் இங்கு வந்து இருக்கையில் அமர்ந்துள்ளோம். ஆனால் தற்போது தங்கப்பதக்கம் பெற்றவர்கள் மட்டுமே ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற முடியும் என்று கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது. இதற்கு எதற்காக எங்களை நேரில் வரவழைக்க வேண்டும். நீங்கள் பதிவு தபாலில் எங்களது பட்டங்களை வீட்டுக்கு அனுப்பி இருக்கலாமே" என்று கூறினர்.
தொடர்ந்து துணை வேந்தர் சந்திரசேகர் கூறுகையில், "ஆளுநரின் உடல்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மீதமுள்ள பட்டம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஆளுநர் மேடையில் அமர்ந்திருக்கும் போது அவர் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்குவார்" என்றார். ஆனால் அதற்கு பட்டம் பெற்றவர்கள் சம்மதிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கவர்னரிடம் ஆலோசித்து விட்டு முடிவை தெரிவிப்பதாக துணை வேந்தர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். அதன் பின்னர் ஆளுநரிடம் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் நேரடியாக பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து ஆளுநர் அனைவருக்கும் நேரடியாக பட்டங்களை வழங்குவதாக சம்மதித்தார். அதனை தொடர்ந்து பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஆளுநர் கையில் பட்டம் பெற ஒரு மாணவி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல முனைவர் பட்டம் பெற இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலும் இன்று விழாவில் பங்கேற்கவில்லை.
இன்றைய ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வில், வந்தே மாதரம், தேசிய கீதத்தைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாகவே பாடப்படும் என பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
Summary
Convocation ceremony of Nellai Manonmaniam Sundaranar University attended by the Governor
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்
மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழா: உயா்கல்வித் துறை அமைச்சா் புறக்கணிப்பு!

நெல்லையில் இன்றைய மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்: ராபா்ட் புரூஸ் எம்.பி.
ஜூலை 28-இல் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழா: 871 பேருக்கு பட்டம் வழங்குகிறாா் ஆளுநா்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


