மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்தார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரானாா் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகின்றது. தமிழக ஆளுநர் அர்லேகர் மாணவர்களுக்கு பட்டமளிக்கின்றார். இந்த நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வலியுறுத்தப்பட்டது.
ஆனால், ஆளுநர் பங்கேற்கும் விழா என்பதால், ஆளுநர் மாளிகையிலிருந்து வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, முதலில் 'வந்தே மாதரம்', இரண்டாவதாக 'தேசிய கீதம்' மற்றும் மூன்றாவதாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.
மேலும், இதை மீறினால் தன் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை வந்து விடும் என்றும் துணைவேந்தா் கூறியிருந்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பெயர் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே அப்பாடல் முதலில் பாடக்கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், திருநெல்வேலி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ராபா்ட் புரூஸ், நெல்லை தவெக எம்எல்ஏ முருகன் உள்ளிட்டோர் புறக்கணிப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த நிகழ்வை புறக்கணித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்படும் என்பதற்கு கண்டனம் தெரிவித்து அவர் இந்நிகழ்வைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.
Summary
Tamil Nadu Higher Education Minister Viswanathan boycotted the Manonmaniam Sundaranar University convocation ceremony.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

நெல்லையில் இன்றைய மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்: ராபா்ட் புரூஸ் எம்.பி.

உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம், ஊழல் இருக்காது! புகார் அளிக்க தனி இணையதளம்!

முதல்வரும் ஆளுநரும் ஆழமான புரிதலோடு செயல்படுகிறார்கள்: அமைச்சர் விஸ்வநாதன்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


