முதல்வரும் ஆளுநரும் ஆழமான புரிதலோடு செயல்பட்டு வருகிறார்கள் என்றும், இந்த உறவு தமிழக மக்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தன்னாட்சி சார்ந்த ஒன்றாகும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று(ஜூலை 8) தெரிவித்தார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், ”புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு, தமிழக அரசிடம் பேசி விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்செந்தூரில் புதுவை பக்தர்களுக்கான விடுதி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் படியும், ஒப்பந்தங்களின் படியும் புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய 7 டி.எம்.சி. காவிரி தண்ணீரை வழங்குவதை சீர் செய்ய வேண்டும், புதுச்சேரிக்கென தனியாக ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக முதல்வர் விஜய்யிடன் எடுத்துகூறி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை, மாறாக, முதல்வரும், ஆளுநரும் மிக ஆழமான புரிதலோடு செயல்பட்டு வருகிறார்கள், இந்த உறவு தமிழக மக்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தன்னாட்சி (Autonomy) சார்ந்த ஒன்றாகும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், விரைவில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Summary
Tamil Nadu Higher Education Minister Viswanathan stated that the Chief Minister and the Governor are working with a deep understanding, and that this relationship is rooted in autonomy aimed at safeguarding the welfare and rights of the people of Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுநரை பேரவைத் தலைவர் சந்தித்தது ஏன்? அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

என்டிஏ ஊழலின் சின்னமாக விளங்குகிறது: கேரள உயர்கல்வித் துறை அமைச்சர்

"ஆளுநருடன் இனி மோதல் கிடையாது": அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

"தினமணி சாதாரணமான ஒரு நாளிதழ் அல்ல": அமைச்சர் விஸ்வநாதன் புகழாரம்
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK




