FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3 -வதாக பாடப்படுவது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் கருத்து.

News image

அமைச்சர் நிர்மல்குமார் - படம்: விடியோ கிளிப்

Updated On :28 ஜூலை 2026, 12:05 pm IST

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெறுகிறது.

விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் தங்கப் பதக்கங்களையும் வழங்குகிறார்.

இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் விஸ்வநாதனுக்கு இந்த விழாவுக்கு அழைப்பு விடுத்தும் அவர் பங்கேற்கவில்லை. அதேபோல இன்று முனைவர் பட்டம் பெறவிருந்த மகேஷ் குமார் அகர்வாலும் விழாவில் பங்கேற்கவில்லை.

பல்கலைக்கழக விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்படுவது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில்,

"தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் தரப்பில் பல வழிகாட்டுதல்களை கொடுத்து வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல. இங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும். பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில்கூட மாநில மொழிக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். அதனால் தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3 ஆவதாக பாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

Summary

Priority for TamilThai Vazhthu in Tamil Nadu: Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.