சீமான், சரத்குமார் என அனைவரும் இப்போது ஒரே மேடையில் இருப்பதைபோல, இரண்டு மாதங்களுக்கு முன்னால் இருந்திருந்தால், தமிழகத்தின் நிலைமையே மாறியிருக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூரில் நடைபெற்ற சரத்குமார் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ”72 வயதானாலும் எண்ணம் மற்றும் செயலால் சரத்குமாருக்கு 27 வயதுதான்.
மாப்பிள்ளை சீமான் உள்பட பல்வேறு அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் இருப்பது அழகாக உள்ளது. இதேபோன்ற மேடை இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால், தமிழகத்தின் அரசியல் நிலைமை எப்படி இருந்திருக்கும்.
இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். சிலர் எடுத்த எடுப்பிலேயே முதல்வராகி விடுகிறார்கள். ஆனால், சரத்குமார் முதல்வராக வர அனைத்து தகுதிகளையும் கொண்டவர். ஆண்டவர், இப்போது வேண்டாதவர்களை பதவியில் வைத்துவிடுகிறார். இது கலிகாலம். இப்போது இருக்கும் காங்கிரஸ் உண்மையான காங்கிரஸ் கட்சியே அல்ல.
காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் காக்ரோச்சின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கின்றது. மத்திய கல்வித் துறை அமைச்சர் மாணவர்களின் நலம் கருதி ராஜிநாமா செய்துள்ளார்.
வினாத்தாளை கசிய விடுபவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் கடுமையான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றவுள்ளது.
தேர்தல் நேரத்தில், அரசியல் கட்சிகள் பேரம் பேசுகின்றன. ஆனால், ஒரு பைசாகூட வாங்காமல் தேசிய நீரோட்டத்தில் சேர்ந்தவர் சரத்குமார். அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு கொடுத்தால்தான் நன்றாக இருக்கும்.
அகில இந்திய பாஜக தேர்தல் வரவுள்ள நிலையில், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சரத்குமாருக்கு பதவிகள் தானாகவே தேடி வரும்" என்றார்.
Summary
BJP State President Nainar Nagendran has stated that if figures like Seeman and Sarathkumar had been on the same stage two months ago as they are now the situation in Tamil Nadu would have been completely different.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK
பெண்களைத் துரத்தும் தவெக நிர்வாகிகள்! சிங்கப்பெண் பாதுகாப்புப் படை தூங்குகிறதா? நயினார் நாகேந்திரன்

"எல்லா அமைச்சர்களும் ரீல்ஸ்தான் எடுக்கிறார்கள்!": நயினார் நாகேந்திரன்! | BJP | TVK

அமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் கொடுத்த புகார் என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




