மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே காரணம் என மக்களைவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (ஜூலை 29) குற்றம் சாட்டினார்.
மக்களவையில் இன்று ராகுல் காந்தி பேசுவதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அவையில் பேச நினைத்ததை செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன் என அவையிலேயே ராகுல் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசியதாவது:
''மக்களவையில் பேசுவதற்கான வாய்ப்பை அளிக்க மறுக்கிறார் அவைத் தலைவர். நான் பேசுவதற்காக அவையில் ஒழுங்கைக் கொண்டுவருமாறு பலமுறை கோரிக்கை வைத்தேன். ஆனால், அனுமதி கொடுக்கவில்லை.
இளைஞர்கள் போராட்டத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு காரணமானவர்கள் குறித்துப் பேச அனுமதி கேட்டிருந்தேன். ஜந்தர் மந்தரில் இருந்து தொடங்கிய பேரணியில் பெண்கள், சிறுமிகள் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்களைத் தாக்க பயன்படுத்தப்பட்ட தடிகளில் ஆணிகள் பொருத்தப்பட்டிருந்தன.
மாணவர்கள் மீதான காவல் துறையின் தாக்குதலுக்கு அமித் ஷாவே காரணம். நான் மன்னிப்பு கேட்டால் அவையில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒருபோதும் பாஜக, ஆர்எஸ்எஸ் அல்லது அவற்றுடன் தொடர்புடைய எவரிடமும் ஒருபோதும் மன்னிப்பு கேட்டு நிற்கமாட்டேன்.
நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்தபோது காவல் துறைக்கு அமித் ஷா தொலைபேசியில் பேசியதை நானே கண்டேன். அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் இருந்து அமித் ஷாவுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. அதனால் போராட்ட சாலையில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பது அமித் ஷாவுக்குத் தெரியும்'' என ராகுல் குறிப்பிட்டார்.
Summary
Amit Shah himself is responsible for the police attack on students: Rahul Gandhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி!
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்வி
பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்

மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |



