தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புவிநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

மக்களவையில் பேசத் தடுத்ததை செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்தி

மக்களவையில் பேசத் தடுத்ததை செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது பற்றி...

Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi.

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி. - கோப்புப் படம்

Published On :

மக்களவையில் பேசத் தடுத்த கருத்துகள் அனைத்தையும் செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 29) தெரிவித்துள்ளார்.

மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த பொதுத் தேர்வுகள் முறைகேடு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மக்களவையில் இன்று நான் உரையாற்றும்போது, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர செயல்களைக் குறிப்பிட்டு அதற்குப் பொறுப்பானவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா என்று பேசினேன். ஆகையால், தொடர்ந்து பேச பாஜக என்னை அனுமதிக்கவில்லை.

இன்று மாலை 6 மணிக்கு, நான் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, மக்களவையில் பேச அனுமதிக்கப்படாத அனைத்தையும் கூறுவேன். அவர்களால் ஒலிவாங்கியை அணைக்க முடியும்; ஆனால் மாணவர்களின் எதிரொலியை அல்ல என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Summary

Senior Congress leader Rahul Gandhi stated today (July 29) that he would speak at a press conference about all the remarks he was prevented from making in the Lok Sabha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.