தில்லியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தலைமையில் மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல் துறை நடத்திய தடியடி தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால், தில்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகவும், சிஜேபி இளைஞர்களுக்கு ஆதரவாகவும் இன்று (ஜூலை 24) மாலை தில்லியில் உள்ள இந்தியா கேட் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதுபற்றி, ராகுல் காந்தி கூறியதாவது:
“எங்கள் மாணவர்கள் வீதிகளில் இருக்கிறார்கள். அதனால், நாங்களும் வீதியில் இறங்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நினைத்தோம். எனவே, அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம்.
ஆனால், நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். பிறகு நாங்கள் காந்தி ஸ்மிருதிக்குச் செல்ல வேண்டும் எனக் கூறினோம். அவர்கள் பேருந்தை இங்கேயே நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள். எங்களால் முன்னேறிச் செல்ல முடியவில்லை.
மாணவர்களுக்கு நாங்கள் கூற விரும்பும் முக்கிய செய்தி என்னவென்றால் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது காந்தி ஸ்மிருதிக்குச் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
rally of Members of Parliament, led by Rahul Gandhi, was stopped in Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை நியாயமானது! - ராகுல் காந்தி

தொடரும் எதிர்ப்பு... கருப்பு உடையில் நாடாளுமன்றம் வந்த ராகுல், காங்கிரஸ் எம்.பி.க்கள்!

தில்லியில் பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது - புகைப்படங்கள்

வினாத்தாள் கசிவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்: மாணவர்களை அழைக்கும் ராகுல்!
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai




