தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை நியாயமானது! - ராகுல் காந்தி

மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ளது பற்றி...

News image

ராகுல் காந்தி / போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தும் காவல் துறை - எக்ஸ்

Updated On :23 ஜூலை 2026, 11:01 am IST

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது எனவும் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 23) தெரிவித்தார்.

மாணவர்களிடன் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிகை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்திருந்தார். அவரின் இந்த பதிவைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:

இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கியவர்களில் நீங்களும் ஒருவர்.

கல்வி அமைப்பு முழுமையாகக் கைப்பற்றப்படுவதையும் அழிக்கப்படுவதையும் நீங்கள் அனுமதித்து ஊக்குவித்தீர்கள்; அத்துடன், அதற்குப் பொறுப்பான ஒவ்வொருவரையும் பாதுகாத்தீர்கள்.

மாணவர்களின் கோரிக்கை மிகவும் தெளிவானது.

  • தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

  • மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

  • போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Summary

Sack Dharmendra Pradhan Apologise to the students says Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.