வன்கொடுமையாளர்களைப் பாதுகாக்கக் கூறியவருக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.
இவர் ராஜிநாமா செய்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில், மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்றுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
இளைஞர்கள் மற்றும் பெண்களின் போராட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. ’பாலியல் வன்கொடுமையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’ என்று கூறிய ஒருவரை பாஜக அரசு மத்திய கல்வித்துறை அமைச்சராக நியமித்துள்ளது. அவர் மிகவும் மோசமானவர். வன்கொடுமையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியவரை விட மோசமானவர் யாருமில்லை. அவர்தான் தற்போதைய கல்வித்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
இது விசித்திரமானது. பிரதமர் மோடியின் இந்த செயல் விசித்திரமாக உள்ளது. அவரது அமைச்சரவையில் பலபேர் உள்ளனர். ஆனால் அவர், பாலியல் வன்கொடுமையாளர்களைப் பாதுகாக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார். இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Summary
Opposition Leader Rahul Gandhi has alleged that the post of Union Education Minister has been given to a person who advocated for the protection of perpetrators of atrocities.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்பு

தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி!

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!

தில்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்! ராகுல் காந்தியின் பேரணி தடுத்து நிறுத்தம்!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi




