புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கோப்புப்படம்

Published On :

ஜப்பானின் தெற்கு பகுதிகளில் இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய தீவான கையுஷுவில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி கடலில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடல் அலைகள் 1 மீட்டர் அல்லது 3.28 அடி உயரத்துக்கு எழும்பும் என்றும், கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சில பகுதிகளில் ஏற்கனவே சுனாமி அலைகள் எழத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்டுகிறது.

குமாமோடோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுஓகா, சாகா, ஒய்டா, மியாசகி பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ஜூன் 25ல் நிலநடுக்கம்!

ஜப்பானின் வடகிழக்கு மாகாணங்களில் வியாழக்கிழமை (ஜூன் 25) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டோக்கியோ, ஹாஷிகாமி உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டது. எனினும் இதில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்ல.

ஜப்பான் மட்டும் ஏன்?

பசிபிக் பெருங்கடலின் 'நெருப்பு வளையத்தின்' (Ring of Fire) மேற்கு விளிம்பில் உள்ள நான்கு முக்கிய புவித்தட்டுகள் (tectonic plates) சந்திக்கும் இடத்தில் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால்தான் உலகின் நிலநடுக்க பாதிப்புகளை அதிகம் சக்திக்கும் நாடுகளில் ஜப்பான் முதன்மையானதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.