மும்பை: இந்த வாரம் நடைபெறவுள்ள உலகளாவிய மத்திய வங்கிகளின் முக்கிய கொள்கை முடிவுகள் முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதாலும், ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட பரவலான விற்பனையாலும் உள்ளூரில் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மாற்றமின்றி வர்த்தகமான நிலையில், வர்த்தக முடிவில் சரிந்து நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 76,988.48 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 76,672.77 புள்ளிகளையும் எட்டியது. அதாவது 315.71 புள்ளிகள் என்ற அளவில் ஏற்ற இறக்கத்தைக் கண்டது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 69.86 புள்ளிகள் சரிந்து 76,765.92 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 10.60 புள்ளிகள் சரிந்து 23,985.35 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு 6.97 சதவீதம் சந்தித்தது. ஜூன் காலாண்டிற்கான ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 3.17 சதவீதம் குறைந்து ரூ. 2,680 கோடியாக இருப்பதாக நிறுவனம் அறிவித்ததே இதற்குக் முக்கிய காரணமாகும். மேலும், பாரத் எலக்ட்ரானிக்ஸ், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகளும் சரிந்த நிலையில், மறுபுறம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எடர்னல், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ் மற்றும் டைட்டன் ஆகிய பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.1 சதவீதம் உயர்ந்த நிலையில், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 0.2 சதவீதம் சரிந்தது நிறைவடைந்தன.
துறைவாரியான செயல்பாடுகளில், நிஃப்டி குறியீடில் எனர்ஜி 1.7 சதவீதமும், எஃப்எம்சிஜி - 1.4 சதவீதமும், பொதுத்துறை வங்கி - 0.9 சதவீதமும், மெட்டல் - 0.6 சதவீதமும், நிஃப்டி வங்கி குறியீடு - 0.58 சதவீதமும், இன்ஃப்ரா - 0.5 சதவீதமும், தனியார் வங்கி - 0.4 சதவீதமும் மற்றும் மீடியா - 0.34 சதவீதமும் சரிந்தன. மறுபுறம் டிசிஎஸ் 4.46 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டிய பங்காகத் திகழ்ந்தது. இதனை தொடர்ந்து எடர்னல் 4.23 சதவீதமும், டெக் மஹிந்திரா 3.82 சதவீதமும், நெஸ்லே இந்தியா 3 சதவீதமும், சிப்லா 2.5 சதவீதமும் உயர்ந்தன.
இதனையடுத்து, ஹிந்துஸ்தான் யூனிலீவர் அதன் முதல் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 7% சரிந்து மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து பாரத் எலக்ட்ரானிக்ஸ் - 4.24 சதவீதமும், கோல் இந்தியா - 4 சதவீதமும், டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் - 2.2 சதவீதமும் மற்றும் எனடிபிசி - 2 சதவீதமும் சரிந்தன.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு, பணவீக்கம் உள்ளிட்டவை தணிந்து பங்குச் சந்தைக்கு நிவாரணம் அளித்தது. இருப்பினும், இந்த வாரம் நடைபெறவிருக்கும் ஃபெட், பாங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பாங்க் ஆஃப் ஜப்பான் உள்ளிட்ட முக்கிய மத்திய வங்கிகளின் கொள்கைக் கூட்டங்களுக்கு முன்னதாக, முதலீட்டாளர்களின் எச்சரிக்கையுடன் இருந்தனர்.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 10.84 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடும் சரிவுடன் நிறைவடைந்த நிலையில் மறுபுறம் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு சற்று உயர்வுடன் நிலைபெற்றது.
ஐரோப்பிய சந்தை நேர்மறையான நிலையில் வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் கலவையான போக்கில் நிறைவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ. 1,688.23 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 2.82 சதவீதம் சரிந்து 85.87 டாலராக உள்ளது.
Summary
Benchmark indices Sensex and Nifty ended flat on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!
24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!

அமெரிக்க-ஈரான் பதற்றம் எதிரொலி: சென்செக்ஸ் 1,677.12 புள்ளிகளும், 23,900 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்த நிஃப்டி!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2




