நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஜேகே பேப்பர் முதல் காலாண்டு நிகர லாபம் 63% உயர்வு!

விற்பனை அளவு அதிகரிப்பு மற்றும் மேம்பட்ட தயாரிப்பு காரணமாக, ஜேகே பேப்பர் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 136.27 கோடியாக உயர்வு.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 9:55 pm IST

புதுதில்லி: ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில், விற்பனை அளவு அதிகரிப்பு மற்றும் மேம்பட்ட தயாரிப்பு ஆகியவற்றின் காரணமாக, ஜேகே பேப்பர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 63% உயர்ந்து ரூ. 136.27 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ. 83.75 கோடியாக இருந்தது.

முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் அதன் ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 1,998.67 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ. 1,771.78 கோடியாக இருந்தது.

ஆய்வுக்கு உள்ளிட்ட காலாண்டில் நிறுவனத்தின் மொத்தச் செலவு ரூ. 1,736.03 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 1,567.55 கோடியாக இருந்தது.

காகிதம் மற்றும் அட்டைச் சந்தை சவாலாக இருந்தபோதிலும், முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், அதிக விற்பனை அளவும் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புக் கலவையும் நடப்புக் காலாண்டில் சிறந்த செயல்பாட்டிற்கு வழிவகுத்ததாக தெரிவித்தார் ஜேகே பேப்பர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ஹர்ஷ் பதி.

இதற்கிடையில், நிறுவனத்தின் பேக்கேஜிங் கன்வெர்ஷன் வணிகமும் வருவாய் மற்றும் லாபத்தின் அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

Summary

JK Paper Ltd reported a net profit to Rs 136.27 crore in the first quarter ended June 30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.