36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 827.57 புள்ளிகள் உயர்ந்து 77,569.39 புள்ளிகளாகவும், நிஃப்டி 244.10 புள்ளிகள் உயர்ந்து 24,206.90 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 5:58 pm IST

மும்பை: டிசிஎஸ் நிறுவனம் தனது ஜூன் காலாண்டு நிகர லாபம் அதிகரித்துள்ளதாக அறிவித்ததாலும், நடப்புக் காலாண்டில் தேவை மீண்டும் மேம்படும் என வழிகாட்டியதாலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட ஏற்றத்தின் காரணமாக, பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றைய வர்த்தகத்தில் உயர்ந்து நிறைவடைந்தன.

உலகளாவிய சந்தையில் நிலவிய சாதகமான சூழல் மற்றும் முன்னணி நிறுவனப் பங்குகளின் எழுச்சியால், ஆரம்ப வர்த்தகத்தில் உள்நாட்டுப் பங்குகள் உயர்நன.

இன்றைய வர்த்தகத்தில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 694.83 புள்ளிகள் உயர்ந்து 77,423.82 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 195.95 புள்ளிகள் உயர்ந்து 24,154.85 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 827.57 புள்ளிகள் உயர்ந்து 77,569.39 புள்ளிகளாகவும், நிஃப்டி 244.10 புள்ளிகள் உயர்ந்து 24,206.90 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் எச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் பார்தி ஏர்டெல் மற்றும் சன் பார்மா பங்குகள் சரிந்தன.

நிஃப்டி மிட்கேப் 100 1.4 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 1.5 சதவீதமும் உயர்ந்து புதிய சாதனை உச்சத்தை எட்டியது.

இதற்கிடையில், நிஃப்டி மெட்டல் குறியீடு 1.5 சதவீதமும், நிஃப்டி பேங்க் 1.4 சதவீதமும் உயர்ந்தன. அதே நேரத்தில், ஆயில் & கேஸ், தனியார் வங்கி, எனர்ஜி, இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் கன்ஸ்யூமர் குறியீடு 1 சதவீதம் முதல் 1.3 சதவீதம் வரை உயர்ந்த நிலையில், ஆட்டோ குறியீடு 0.72 சதவீதம் அதிகரித்தது.

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், ஜூன் காலாண்டு நிகர லாபம் 4.61 சதவீதம் அதிகரித்து ரூ.13,349 கோடியாக உயர்ந்ததாக அறிவித்ததையடுத்து அதன் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்ன.

ஆசிய சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி 4 சதவீதத்திற்கும் மேலும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு 1.91 சதவீதமும், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு 0.76 சதவீதமும் மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 1.73 சதவீதம் அதிகரித்தன.

அமெரிக்க சந்தை நேற்று (வியாழக்கிழமை) உயர்வுடன் நிறைவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ. 532.86 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

கேப்ரி குளோபல், ஜேகே வங்கி, ஏதர் இண்டஸ்ட்ரீஸ், ஆனந்த் ரதி, ஆரக்கிள் ஃபின் சர்வீசஸ், நுவமா வெல்த், சோனா பிஎல்டபிள்யூ, வெல்ஸ்பன் கார்ப், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டார் ஹெல்த், நைக்கா, டெல்லிவரி, ஜிண்டால் சா உள்ளிட்ட சுமார் 140 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியது.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.33 சதவீதம் உயர்ந்து 76.55 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Stock market benchmark indices Sensex and Nifty surged in early trade on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.