இந்தியாவில் செயற்கைக்கோள் உதவியுடன் இயங்கும் செல்போனை தொலைத்தொடர்பு நிறுவனங்களில், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அறிமுகம் செய்கிறது.
இது வணிகப் பயன்பாட்டுக்காக முதல்முறையாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செல்போனை வாங்கினாலும், பொதுமக்கள் யாரும், உரிய அனுமதியின்றி பயன்படுத்த முடியாது.
தொலைத்தொடர்புத் துறையிடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்ற பிறகே, செயற்கைக்கோள் செல்போனை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல்-ன் செயற்கைக் கோள் செல்போன், பேட்டரியின் திறன் சிறப்பாக இருப்பதால், நீண்ட காலம் நீடித்து இருக்கும் என்று கூறப்படுகிறது.
செயற்கைக் கோள் செல்போனில் என்ன சிறப்பம்சம் என்றால், உலகில் தொலைத்தொடர்பு வசதியே இல்லாத இடங்களுக்குச் சென்றாலும், செயற்கைக் கோள் தொடர்புடன் இந்த செல்போன் இயங்கும். ஒருவர், உலகின் எந்த மூலையில் இருந்தும், செல்போன் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த செயற்கைக்கோள் செல்போன் விலை ரூ.1,34,166 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வரிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. விரிவான தகவல்களை அறிந்துகொள்ள, மக்கள் அருகில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சென்று விவரங்களை கேட்டறியலாம் என்று கூறப்படுகிறது.
செல்போன் சேவை இல்லாத இடங்களிலும் இந்த செயற்கைக்கோள் செல்போன் வேலை செய்யும் என்பதால், அதிக பயணங்களை மேற்கொள்வோர், வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு இது மிகுந்த பயனளிக்கும் என்றும் தெரிகிறது.
Summary
Satellite phone launched by BSNL in India! Price?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









