மும்பை: இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சந்தை ஏற்றம் கண்டது.
ஐடி பங்குகளின் எழுச்சி மற்றும் அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருந்ததால், ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளாது என்ற எதிர்பார்ப்பு வலுத்ததுள்ளது,
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 655.4 புள்ளிகள் உயர்ந்து 78,157.52-ஐ எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 261.79 புள்ளிகள் உயர்ந்து 77,763.91 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 95.15 புள்ளிகள் உயர்ந்து 24,270.85 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ஹெச்சிஎல் டெக் இன்று 5.79 சதவீதமும், டெக் மஹிந்திரா 1.81 சதவீதம் ஏற்றம் கண்டது. இதனை தொடர்ந்து, பார்தி ஏர்டெல், சன் பார்மா, பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகிய பங்குகள் சரிந்தன.
ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு கிட்டத்தட்ட 6 சதவீதம் மீட்சி கண்டது. ஜப்பானின் நிக்கி 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகிய குறியீடுகளும் உயர்ந்தன.
இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டின் சாதகமான முடிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொடரும் மீட்சி ஆகியவற்றால் பங்குச் சந்தை மேலும் உயர்ந்தது. இந்த வாரத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏறக்குறைய 1% உயர்ந்தன.
ஐரோப்பிய சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமாயின. அமெரிக்க சந்தைகள் கலவையான போக்கில் முடிவடைந்த நிலையில், டவ் ஜோன்ஸ் தொழில்துறை 1.14 சதவீதம் உயர்ந்தன. இதனிடையில், நாஸ்டாக் கூட்டுக்குறியீடு 0.80 சதவீதம் சரிந்த நிலையில், எஸ்&பி 500 மாற்றமின்றி முடிவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமையன்று ரூ. 311.82 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
தொடர்ந்து நான்கு வர்த்தக அமர்வுகளாகச் சரிவைச் சந்தித்து வந்த இந்திய ரூபாய், வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க டாலருக்கு நிகராக 17 காசுகள் உயர்ந்து ரூ. 95.22 என்ற அளவில் நிலைபெற்றது.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், 0.24 சதவீதம் உயர்ந்து பங்கு ஒன்றுக்கு 71.97 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Benchmark equity indices Sensex and Nifty ended higher on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!

பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!

3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!

சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |




