மும்பை: அரசியல் ஸ்திரமின்மை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவையால், பங்குச் சந்தைக் குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தில், சிறிதளவு உயர்ந்து நிறைவு பெற்றது. சென்செக்ஸ் 43 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் நிஃப்டி 13 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் அதிகபட்சமாக 78,676.98 புள்ளிகளும், பிறகான வர்த்தகத்தில், குறைந்தபட்சமாக 78,298.92 புள்ளிகளையும் தொட்டு, கடைசியில் 378.06 புள்ளிகள் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 43.27 புள்ளிகள் உயர்ந்து 78,542.44 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 13.15 புள்ளிகள் உயர்ந்து 24,583.80 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எடர்னல், என்.டி.பி.சி, ஐ.டி.சி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.
ஊக்கமளிக்கும் பொருட்டு, பெருநிறுவன வருவாய் சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த நிலையிலும், ஹோர்முஸ் நீரிணை சுற்றியுள்ள பகுதியில் தொடர் நிச்சயமற்ற நிலமையால், பங்குச் சந்தைகள் ஏற்ற - இறக்கத்துடன் வர்த்தகமானது.
இந்த வார இறுதியில், இந்தியா மற்றும் அமெரிக்காவில் முக்கிய பணவீக்கத் தரவுகள் வெளியாகவுள்ள நிலையில், புதிய பொருளாதாரக் குறிப்புகளுக்காகக் காத்திருக்கும் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்யாமல் மாற்று வழிகள் குறித்து அறாயிந்து வந்தனர்.
ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆகியவை உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஐரோப்பியச் சந்தைகள் கலவையான போக்கிலும் அமெரிக்கச் சந்தைகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று ரூ. 480.24 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.10 சதவீதம் உயர்ந்து 84.47 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Market benchmark indices ended marginally higher on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!

சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!




