ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

ஐபிஓ மூலம் ரூ. 7,400 கோடி நிதி திரட்ட உள்ள ஐந்து நிறுவனங்கள்!

மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள், அடுத்த வாரம் தங்களது ஐபிஓ வெளியிட உள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 10:32 pm IST

புதுதில்லி: வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தூத் டிரான்ஸ்மிஷன், ஷிப்ராக்கெட் மற்றும் மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள், அடுத்த வாரம் தங்களது ஐபிஓ வெளியிட உள்ள நிலையில், அதன் மொத்த வெளியீட்டு அளவாது ரூ.7,400 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோயாளியின் உடனடிப் பரிசோதனைகளைக் கண்டறியும் நிறுவனமான மோல்பயோ டயக்னாஸ்டிக்ஸ் மற்றும் தூத் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றின் ஐபிஓ ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் முதலீட்டாளர்களுக்கு திறக்கப்படும். அதைத் தொடர்ந்து, மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் ஐபிஓ ஆகஸ்ட் 11 ஆம் தேதி திறக்கப்படும்.

இ-காமர்ஸ் தளத்தை செயல்படுத்தும் ஷிப்ராக்கெட் மற்றும் பொறியியல் வார்ப்புகள் மற்றும் கலப்பு எஃகுப் பொருட்கள் தயாரிக்கும் பிஹாரி லால் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் பங்குச் சந்தைக்கு வர உள்ளன.

இந்த ஐந்து நிறுவனங்களும் இணைந்து, சுமார் ரூ.7,443 கோடியைத் திரட்ட இலக்கு வைத்துள்ளன. இந்த ஐபிஓ மூலம் கிடைக்கும் நிதி, பெரும்பாலும் வணிக விரிவாக்கம், செலவினங்கள், கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பிற பெருநிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.

லீப் இந்தியா மற்றும் டெக்னோகிராஃப்ட் வென்ச்சர்ஸ் நிறுவன பங்குகள் தற்போது சந்தாவுக்குத் திறக்கப்பட்டுள்ளன.

தூத் டிரான்ஸ்மிஷன் நிறுவனம், தனது ரூ.3,067 கோடி மதிப்பிலான ஐபிஓ-விற்கு பங்கு ஒன்றுக்கு ரூ.829 முதல் ரூ. 871 என்ற விலை வரம்பை நிர்ணயித்துள்ளது.

டெமாசெக் மற்றும் மோதிலால் ஓஸ்வால் பிரைவேட் ஈக்விட்டி நிறுவன பங்குகள் ரூ.904 முதல் ரூ. 940 கோடி மதிப்பிலான ஐபிஓ-விற்கு பங்கு ஒன்றுக்கு ரூ. 768 முதல் ரூ. 807 என்ற விலை வரம்பை நிர்ணயித்துள்ளது.

மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனம், தனது ரூ.1,553 கோடி மதிப்பிலான ஐபிஓ-வை ஆகஸ்ட் 11 அன்று ஒரு பங்குக்கு ரூ.133 முதல் ரூ. 140 என்ற விலை வரம்பில் வெளியிட உள்ளது.

பெஹாரி லால் இன்ஜினியரிங், தனது ரூ.302 கோடி மதிப்பிலான ஐபிஓ-வை ஆகஸ்ட் 12 அன்று வெளியிட உள்ளது. இந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ரூ. 271 முதல் ரூ. 285 என்ற விலை வரம்பை நிர்ணயித்துள்ளது.

Summary

Five companies set to launch their (IPOs) next week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.