புதுதில்லி: வலுவான விற்பனை ஆகியவற்றால், ஜூன் உடன் முடிவடைந்த முதல் காலாண்டில், ஸ்கை கோல்ட் & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்திலிருந்த ரூ. 43.58 கோடியிலிருந்து இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து ரூ. 104.90 கோடியாக உயர்ந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த இந்நிறுவனம், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில், அதன் மொத்த வருவாய் 78% அதிகரித்து ரூ. 2,012.8 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. இதுவே கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 1,131.2 கோடியாக இருந்தது.
மொத்தச் செலவுகள் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்திலிருந்த ரூ. 1,076.70 கோடியிலிருந்து ரூ. 1,885.94 கோடியாக அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் வலுவான வளர்ச்சியும், லாப வரம்பில் தொடர்ச்சியான முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பு நிதியாண்டின் (2026-27) முதல் காலாண்டு சிறப்பான தொடக்கமாக அமைந்ததாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மங்கேஷ் தெரிவித்தார்.
விற்பனை வளர்ச்சி, லாபம் மற்றும் பணப்புழக்கம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பேணுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி, 2027 நிதியாண்டில் ரூ. 8,100 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்ட நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக மங்கேஷ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








