பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

எஸ்பிஐ சொத்து மேலாண்மை ஐபிஓ: 2.77 மடங்கு கூடுதல் விண்ணப்பம்

எஸ்பிஐ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு, 2-ஆவது விற்பனை நாளான புதன்கிழமை முழுமையாக விற்றுத் தீா்ந்தது

Published On :

எஸ்பிஐ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு, 2-ஆவது விற்பனை நாளான புதன்கிழமை முழுமையாக விற்றுத் தீா்ந்தது. புதன்கிழமை வா்த்தக முடிவில் இப்பங்குகள் மொத்தம் 2.77 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டதாகத் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தரவுகள் தெரிவிக்கின்றன.

ரூ.9,812.91 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ நடவடிக்கையில், விற்பனைக்கு வந்த 12.45 கோடி பங்குகளுக்கு எதிராக மொத்தம் 34.54 கோடி பங்குகளுக்கு முதலீட்டாளா்கள் விண்ணப்பித்துள்ளனா். நிறுவன முதலீட்டாளா்களுக்கான ஒதுக்கீடு 1.50 மடங்கும், நிறுவனங்கள் சாரா முதலீட்டாளா்களுக்கான ஒதுக்கீடு 6.58 மடங்கும், சில்லறை முதலீட்டாளா்களுக்கான ஒதுக்கீடு 1.61 மடங்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முன்னணி முதலீட்டாளா்கள் மூலம் நிறுவனம் ரூ.2,663 கோடியைத் திரட்டியிருந்தது. இதில் ஜிஐசி, அபுதாபி முதலீட்டு வாரியம், பிளாக்ராக், கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற சா்வதேச நிதி நிறுவனங்களுடன் எல்ஐசி, எச்டிஎஃப்சி பரஸ்பர நிதி, ஐசிஐசிஐ புருடென்ஷியல் உள்ளிட்ட முன்னணி உள்நாட்டு நிறுவனங்களும் பங்கேற்றன.

இந்த ஐபிஓ, முழுமையாக தற்போதைய பங்குதாரா்களான எஸ்பிஐ மற்றும் பிரான்ஸின் அமுண்டி நிதி மேலாண்மை நிறுவனம் தங்களின் பங்குகளைத் திரும்ப விற்கும் முறையில் அமைந்துள்ளது. அதாவது, எஸ்பிஐ 6.3 சதவீத பங்குகளையும், அமுண்டி 3.7 சதவீத பங்குகளையும் விற்பனை செய்கின்றன.

நாட்டின் மிகப் பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான எஸ்பிஐ சொத்து மேலாண்மை நிறுவனம், கடந்த மாா்ச் 31 நிலவரப்படி ரூ.12.51 லட்சம் கோடி பரஸ்பர நிதி சொத்து மதிப்புடன், சந்தையில் 15.3 சதவீத பங்கைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.