தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சொல்ல மறந்த கதை! ஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அதிசய ரயில் நிலையம்!

ஊழியர்கள் இல்லை, ரயில்களும் நிற்காது, ரூ.6 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அதிசய ரயில் நிலையம் பற்றி..

News image

ரயில் நிலையம் - பிரதி படம் - file photo

Updated On :15 ஜூலை 2026, 1:12 pm IST

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே ரூ.6 கோடியில் புதுப்புக்கப்பட்ட நிஷாத்புரா ரயில்நிலையம் விரைவில் உலக அதிசயங்களில் இடம்பெற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

காரணம், ரயில் நிலையம் என்றால், ரயில் அட்டவணைதானே முக்கியத்துவம்பெறும், ஆனால், இங்கோ, கட்டுக்கதைகள்தான் பேசப்படுகின்றன. இங்கே ரயில்கள் நிற்பதில்லை, ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் பணிக்கு வருவதில்லை, ரயில் நிற்காததால் பயணிகள் யாரும் இந்த ரயில் நிலையம் பக்கம் தலைகாட்டுவதில்லை. ஒரு பேய் பங்களா போல, இந்த ரயில் நிலையம் கைவிடப்பட்டிருக்கிறது, புதுப்பொலிவுடன். சரி இதற்கு என்னதான் காரணம் என்றால் ஒரு பேய்க் கதையாவது இருக்கலாம். அதுவும் இல்லை, அதுதான் சோகம்.

முன்பெல்லாம், நதிக்கரையோரங்களில் மக்கள் அதிகம் வாழத் தொடங்கினர். தற்போது ரயில் நிலையங்களை ஒட்டி நகரப் பகுதிகள் உருவாகி வருகிறது, அதில், ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் என ஒவ்வொரு கதைகளும் பல வாழ்க்கையும், வாழ்வாதாரமும் இருக்கும். போபால் அருகே அமைந்துள்ள நிஷாத்புரா ரயில் நிலையத்தைப் பற்றி பேசினால் பலருக்கும் சிரிப்பும் வராது, ஆச்சரியம் மட்டும்தான் ஏற்படும்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.6 கோடி செலவில் இந்த ரயில் நிலையத்தின் நடைமேடைகள் அமைக்கப்பட்டு, நாற்காலிகள் போடப்பட்டு, விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆனால் ஒன்றே ஒன்று செய்யப்படவில்லை. ரயில்கள் இங்கு நிற்கவில்லை.

ரயில் நிலையம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும், இங்கு இரவில் செல்ல யாருமே பயப்படத்தான் செய்வார்கள். காரணம், எப்போதும் நிசப்தத்துடன் காணப்படுமாம். ரயில்கள் இவ்வழியாகச் செல்லும், திரும்பும். ஆனால், இங்கு யாரும் வரவே மாட்டார்கள்.

சரி.. இவ்வளவும் சொல்லிவிட்ட பிறகும்கூட, ஏன்தான் இந்த ரயில் நிலையத்துக்கு இந்த நிலை என்று கேட்டால் அதற்குத்தான் விடை காணப்படவில்லை. பேய் இருந்ததா? கொலை நடந்ததா? என்றால் எந்த பதிலும் இல்லை. ஒரு பொய்யான கதைகூட இல்லை.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளும் எங்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று கைவிரிக்கிறார்கள்.

ஒரு ரயில் நிலையம் கட்டப்பட்டது, அனுமதிகள் பெறப்பட்டன. ஆனால், ரயில்கள் நிற்கவில்லை, பயணிகள் இங்கு கால் வைக்கவேயில்லை. இதற்கு காரணமும் இதுவரை யாரும் சொல்லவில்லை. ரயில்வே ரூ.6 கோடியை செலவிட்டு பயணிகளுக்கு உதவும் என்று பார்த்தால், கற்பனைகள்தான் உருவாகி வருகின்றன.

சில ரயில்வே ஊழியர்களோ விரைவில் இந்த ரயில் நிலையம் திறக்கப்படும் என்கிறார்கள். அருகில் உள்ள வியாபாரிகள் மக்களோ, ரயில்நிலையம் திறக்க வேண்டும், தங்களுக்கு பயனளிக்க வேண்டும் என்று எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை.

நிஷாத்புரா ரயில் நிலையம் ஒன்று கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருப்பது ரயில்வே நிர்வாகத்துக்கு தெரியுமா? என்பதும் தெரியவில்லை. இப்போதைக்கு இந்த ரயில் நிலையம் முழுக்க, அதனை பார்ப்பவர்களின் கற்பனை குதிரைகள் மட்டும் ஆங்காங்கே ஓடிக்கொண்டிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.