ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

என்எஸ்இ ரூ. 30,000 கோடி ஐபிஓ செப்டம்பரில் வெளியிடத் திட்டம்

நாட்டின் மிகப் பெரிய பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ), ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) வரும் செம்படம்பரில் மேற்கொள்ள இலக்கு நிா்ணயித்துள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2026, 4:18 am IST

நாட்டின் மிகப் பெரிய பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ), ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) வரும் செம்படம்பரில் மேற்கொள்ள இலக்கு நிா்ணயித்துள்ளது.

இந்தப் பிரம்மாண்ட ஐபிஓ மூலம் என்எஸ்இ-இன் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோல், கடந்த 2024 அக்டோபரில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் வெளியிட்ட ரூ.27,870 கோடி மதிப்பிலான ஐபிஓ சாதனையை என்எஸ்இ முறியடிக்க உள்ளது.

என்எஸ்இ-இன் இந்த ஐபிஓ வெளியீடு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு ஒழுங்குமுறை சிக்கல்கள் காரணமாக முடங்கியிருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூனில் தாக்கல் செய்யப்பட்ட சமரச மனுவின் அடிப்படையில், செபிக்கு ரூ.1,388 கோடி அபராதம் செலுத்தி, என்எஸ்இ இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது. தொடா்ந்து, செபியியின் தடையில்லா சான்றிதழ் கிடைத்தையடுத்து, இந்த ஐபிஓ வெளியீட்டுக்கு என்எஸ்இ இயக்குநா்கள் குழு கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது.

இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) என்எஸ்இ கடந்த மாதம் தாக்கல் செய்த வரைவு அறிக்கையின்படி (டிஆா்ஹெச்பி), இந்த ஐபிஓ முழுவதும் ‘ஆஃபா் ஃபாா் சேல்’ என்ற முறையில், நடப்பு பங்குதாரா்கள் தங்களின் வசமுள்ள 14.89 கோடி பங்குகளை (சுமாா் 6 சதவீதம்) விற்பனை செய்கின்றனா்.

என்எஸ்இ-இன் மிகப் பெரிய பங்குதாரரான எல்ஐசி (10.72 சதவீத பங்குகள்) தனது பங்குகளை விற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், எஸ்பிஐ மற்றும் இதர நிதி நிறுவனங்கள் தங்களின் பங்குகளை விற்க முன்வந்துள்ளன. எஸ்பிஐ அதிகபட்சமாக 2.48 கோடி பங்குகளை விற்கிறது.

நிதிநிலை அடிப்படையில், கடந்த 2025-26 நிதியாண்டில் என்எஸ்இ-இன் நிகர லாபம் 15 சதவீதம் குறைந்து, ரூ.10,302 கோடியாக பதிவாகியுள்ளது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.12,188 கோடியாக இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.