3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!

யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

The answer key for the UGC-NET exam will be released this week!

யுஜிசி - கோப்புப் படம்

Published On :

யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு இந்த வாரம் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு தகுதி பெறுவதற்கும், அங்கு முனைவர் பட்டங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் மற்றும் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், தேசிய தேர்வு முகமை சார்பில் ‘நெட்’ தேர்வு நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் இந்தத் தேர்வானது ஆண்டுக்கு இரண்டு முறை பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல் தேர்வு ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் 30 வரை ஆறு நாள்கள் நடத்தப்பட்டது. மேலும், ஜூலை 6 ஆம் தேதி மறுதேர்வும் நடைபெற்று முடிந்தது.

இந்தத் தேர்வின் விடைக்குறிப்புக்காக தேர்வர்கள் காத்திருக்கும் நிலையில், அவை இந்த வாரத்தில் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்று (ஆக.10) வெளியிட்டிருக்கிறது.

யுஜிசி நெட் (UGC NET) மட்டுமல்லாது, அறிவியல் துறைகளுக்கான சிஎஸ்ஐஆர் நெட் (CSIR-NET), விவசாயம் மற்றும் விலங்கு அறிவியல் பிரிவுகளுக்கான ஐசிஏஆர் ஏஐஇஇ (பிஜி) மற்றும் (பிஎச்டி) ICAR AIEEA (PG) and AICE (PhD) ஆகிய தேர்வுகளுக்கான விடைக் குறிப்புகளும் இந்த வாரத்தில் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தற்காலிக விடைக்குறிப்பைப் பார்க்கவும், அதில் ஏதேனும் திருத்தம் இருப்பின் தேர்வர்கள் முறையிடலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுஜிசி

யுஜிசி - எண்டிஏ இணையதளம்

Summary

The National Testing Agency has announced that the answer key for the UGC-NET exam will be released this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.