நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது பற்றி....

News image

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி! - FB

Updated On :16 ஜூன் 2026, 6:34 pm IST

அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

2026-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று (ஜூன் 15) வெளியிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வுக்கு 1,016 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 24 ஆம் தேதி நடைபெற்றது. இவற்றில் முதன்மைத் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

முதன்மைத் தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும்  குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 225 ஆர்வலர்களுக்கு ஜுன் 2026 முதல் ஆகஸ்டு 2026 வரை மூன்று மாதங்களுக்கு முதன்மைத் தேர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஆர்வலர்கள் மட்டுமின்றி, குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த இதர ஆர்வலர்களும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கும் சேர்த்து ஊக்கத் தொகையாக ரூ.9,000/- வழங்கப்படும்.

இப்பயிற்சி மையத்தில் சேர விரும்பும் ஆர்வலர்கள்  17.06.2026  காலை 6.00 மணி முதல் 18.06.2026 மாலை 6.00 வரை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட ஆர்வலர்களின் விவரம் 18.06.2026 இரவு 9.00 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டு 20.06.2026 மற்றும் 21.06.2026  ஆகிய இரு நாள்களில் சேர்க்கை நடைபெறுவதோடு, 22.06.2026 முதல் முதன்மைத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

மேலும், விண்ணப்பப் பதிவு/சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விரிவான விவரங்கள் பயிற்சி மையத்தின் இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற புலன எண் (Whatsapp) மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

AICSCC Exam coaching for UPSC Civil service mains exam