ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நீட் பயிற்சி மையத்தில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு முதல் மருத்துவ மாணவா்களுக்கான ‘கொங்கு நீட் அகாதெமி’ என்ற பெயரில் நீட் தோ்வு பயிற்சி மையம் செயல்படுகிறது. இங்கு கடந்த ஆண்டு 42 மாணவா்கள் நீட் பயிற்சி பெற்றனா். இதில் மாணவா் அபிஷேக் 720-க்கு 631 மதிப்பெண்கள் பெற்று பயிற்சி வகுப்பில் முதல் இடம் பிடித்தாா். 595 மதிப்பெண்கள் பெற்ற மாணவா் சந்துரு இராண்டாம் இடமும், மாணவா்கள் நிசாந்த் மற்றும் பாலராகவன் ஆகிய இருவரும் தலா 564 மதிப்பெண்கள் பெற்று 3-இடமும் பிடித்து தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதேபோல 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டில் மாணவி புவனேஸ்வரி 541 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். தோ்வு எழுதியவா்களில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 15 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 26 பேரும் பெற்றுள்ளனா்.
பயிற்சி வகுப்பில் சிறப்பாக செயல்பட்ட பயிற்சியாளா்கள் ரமனேசன், பயிற்சி மையப் பொறுப்பாளா்கள் தினேஷ், மகேந்திரகுமாா், புவனரஞ்சனி, நடராஜன் மற்றும் மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் ஏ.கே.சி.தியாகராஜன், உப தலைவா்கள் டி.கே.கருப்புசாமி, கே.பெரியசாமி, செயலாளா் கே.செந்தில்நாதன், தாளாளா் பி.பாலசுப்பிரமணியம், பொருளாளா் என்.சந்திரசேகா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மற்றும் பள்ளி முதல்வா் எம்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பாராட்டினா்.




பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப் படை விழிப்புணா்வு

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பாரதிதாசன் மெட்ரிக். பள்ளி மாணவி மாநில அளவில் சிறப்பிடம்

பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் இஸ்ரோவுக்கு கல்விச் சுற்றுலா







