கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பின்னால் நிற்க வேண்டிய நிலை காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதாக்களை தாக்கல் செய்யும்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி மறைமுகமாக அதனைத் தடுக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுடன் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
''பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பதிவிட்டுள்ளவர்கள் மீது புகார் அளித்துள்ளோம். திமுக எம்.எல்.ஏ.வை கைது செய்த தவெக அரசு இப்போது என்ன செய்யப்போகிறது. முதல்வரை விமர்சித்தால் மட்டும்தான் கைது நடவடிக்கையா?
காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது. கோவை மாவட்ட பாஜக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய மாணவர் சங்கம், கம்யூனிஸ் கட்சிகளின் பின்னணியில் தில்லியில் போராடும் கலகக்காரர்கள் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதாக்களை கொண்டுவரும்போதெல்லாம், காங்கிரஸ் இவ்வாறு மறைமுகமான பணியைச் செய்கிறது. மாணவர்களைத் தூண்டிவிட்டு அதன் பின்னால் நிற்கிறது காங்கிரஸ்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு பின்னால் இருக்க வேண்டிய நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. இதைவிட மோசமான நிலை அவருக்கு ஏற்படும்.
பேரணியாக வந்தவர்கள் எல்லோரும் மாணவர் அமைப்பினர். ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பாரசீக நாட்டின் கொடியை வைத்துள்ளவனுக்கு இந்தியாவில் என்ன வேலை?
10 பேர் சேர்ந்து காவல் துறையை அடிக்கின்றனர். வாகனத்தை நொறுக்குகின்றனர். அப்போது என்ன செய்ய முடியும்? சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது பாஜகவின் கடமை.
மோடியின் திட்டங்களை பிடிக்காதவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.
அமைச்சர் ஏன் பதவி விலக வேண்டும். அவர் துறையில் இயங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தார்களா? இல்லையா? மீண்டும் தேர்வு நடத்தப்பட்டதா இல்லையா?
தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் கூட வினாத்தாள் கசிவு நடந்துள்ளது'' எனக் குறிப்பிட்டார்
முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து பேசிய அவர், ''மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தை ஆரம்பித்தவர் காமராஜர். சத்துணவுத் திட்டத்தை கொண்டுவந்தர் எம்.ஜி.ஆர்., தலைவர்களின் பெயர்களை வைப்பதில் எந்தவித தவறும் இல்லை'' எனப் பேசினார்.
Summary
Rahul Gandhi finds himself in the position of someone standing behind a cockroach Nainar Nagendran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண்க! - முதல்வருக்கு பாஜக வலியுறுத்தல்

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK
பெண்களைத் துரத்தும் தவெக நிர்வாகிகள்! சிங்கப்பெண் பாதுகாப்புப் படை தூங்குகிறதா? நயினார் நாகேந்திரன்








